கரோனா அச்சுறுத்தல் காரணமாக வீட்டை விட்டு அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று காவல்துறை அன்பாக அறிவுறுத்த, தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி நகரமக்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

Advertisment

 Kovilpatti is a real curfew today ... because it is ..!

திருநெல்வேலியில் கரோனா பாதிப்போடு 23 பேரும், தூத்துக்குடியில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருவதால் தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்த கோவில்பட்டி நகரமும் காவல்துறை கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக பொதுமக்களிடம் அன்பாக சொல்லியும் பலன் இல்லை. இதையடுத்து கோபமடைந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், அவசியமின்றி ஊர் சுற்றுபவர்களின் வாகனங்களைபறிமுதல் செய்ய வேண்டுமென கடுமையாக உத்தரவிட, நேற்று முன்தினம் 350 வாகனங்கள், நேற்று 400 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இன்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஒருசிலருக்கு சிறப்பு 'கவனிப்பு' செய்தும் அனுப்பப்படுகிறது.

 Kovilpatti is a real curfew today ... because it is ..!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் வாகனங்கள் மற்றும் வாங்க வருபவர்களின் வாகனங்கள் மட்டுமே கோவில்பட்டி நகருக்குள் அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் கோவில்பட்டிக்குள் நுழையும் சாலையில், 4 இடங்களில் தடுப்பு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. கோவில்பட்டி நகருக்குள்ளும், முக்கிய பகுதிகள் உள்ளஅனைத்து இடங்களிலும் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

144 தடை உத்தரவு அமலுக்கு வந்து 10 நாட்கள் ஆகியும், இன்றுதான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது போல உள்ளது கோவில்பட்டி!