Advertisment

ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்குதல்!! சம்பவ இடத்திலேயே பெயிண்டர் உயிரிழப்பு

Kovilpatti - Painter

ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் கோடீசுவரன். 30 வயதான இவர் பெயிண்டராக உள்ளார். புதன்கிழமை கோவில்பட்டி நடுநிலைப்பள்ளி அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் இவரை வழிமறித்தது.

Advertisment

தன்னை தாக்க வருகிறார்கள் என்று சுதாரித்த கோடீஸ்வரன், அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். பயங்கர ஆயுதங்களுடன் அந்த கும்பல் அவரை விரட்டியது. கோடீஸ்வரனை ஓட ஓட விரட்டிய அந்த கும்பல், அவரை சரமாரியாக வெட்டியது. இதில் நிலைகுலைந்துபோன கோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோடீஸ்வரனை வெட்டி சாய்த்த அந்த கும்பல் சற்று நேரத்தில் அங்கிருந்து தப்பியது.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் கோவில்பட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோடீஸ்வரனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோடீஸ்வரன் கடந்த ஓராண்டு முன்பு ராக்கம்மாள் என்பவரை திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராக்கம்மாள் தனது பெற்றோர் வீடு உள்ள கடலையூருக்கு சென்றுவிட்டார்.

கோடீஸ்வரன் படுகொலைக்கு குடும்ப பிரச்சனை காரணமா, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதாக என மேற்கு காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த படுகொலை சம்பவ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் கோவில்பட்டி நகர மக்கள்.

Police investigation incident painter Kovilpatti
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe