Advertisment

கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சாலைமறியல்.!

po

ஓட்டப்பிடாரம் தாலூகாவிற்குட்பட்ட முறம்பன் பகுதியயைச் சேர்ந்தவர் சுரேஸ்குமார். விவசாய கூலி பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவரது மனைவி சுபாப்ரியாதர்ஷினி.(26) இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இந் நிலையில் சுபாப்ரியாதர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்தும் வாஞ்சிமணியாச்சி போலீசார் சுபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தை இல்லாத ஏக்கதில் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு எதுவும் காரணமா.? என்பது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

மேலும் திருமணமாகி 5 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டாட்சியர் அனிதா அலுவல் சம்பந்தமாக தூத்துக்குடி சென்றுவிட்டதால், பிரதே பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் காலையில் இருந்து மருத்துவமனையில் காத்தியிருந்த சுபா உறவினர்கள் ஆத்திரமடைந்து, அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர், விரைந்து பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisment
Before government hospital Kovilpatti Road traffic
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe