kovilpatti crackers shop incident police investigaton

Advertisment

கோவில்பட்டியிலிருந்து மதுரை செல்லும் சாலையில், வள்ளி மில் அருகே, வெற்றிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசுக்கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட, கடையை ஒட்டினாற்போல் இருந்த ஷெட்டில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் பெறுமான பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறின.

தகவலறிந்து விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். நேற்றிரவு (19/08/2020) நடந்த இச்சம்பவம் காரணமாக, கோவில்பட்டி- சாத்தூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படுத்தாத இந்த வெடி விபத்து குறித்து, சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நல்லவேளையாக, பட்டாசுக்கடைக்கு அருகிலேயே பெட்ரோல் பங்க் இருந்தும், தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.