kovil

Advertisment

ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகம் தடுத்து நிறுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு கோயிலை பூட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகையை உலுக்கிய கரோனோ அச்சுறுத்தலால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகை அருகே உள்ள பால்பண்ணைச்சேரியில் அமைந்துள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்கு ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நாகை அடுத்துள்ள பால்பண்ணைசேரியில் அமைந்துள்ளது அருள்மிகு முனீஸ்வரன் ஆலயம். அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் நம்பிக்கைக்குரிய ஆலயமாக விளங்கி வந்த அந்த கோயில் திருப்பணிகள் கடந்த ஒருவருட காலமாக நடைபெற்று திருப்பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டைவைகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை காண அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அங்கு குவிந்தனர். தகவல் அறிந்த நாகூர் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.

Advertisment

பக்தர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார், யாகசாலை பூஜைகளை நிறுத்தியதுடன், விழாக்குழுவினரை வெளியேற்றி கோவிலை இழுத்து பூட்டினர். அதனை தொடர்ந்து கோவில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருந்திய வாகனம் கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

நாகை அருகே ஊரடங்கு உத்தரவை மீறி நடைபெற இருந்த கோவில் கும்பாபிஷேகத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.