ADVERTISEMENT

’கோவில் கர்பகிரகத்திற்குள் இன்றும் அனைத்து மக்களும் செல்ல முடியவில்லை’ - கி.வீரமணி

03:37 PM Sep 23, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இதில் தி.க தலைவர் வீரமணி, சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில்,பெரியாரின் பிறந்த தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும், திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு தந்தை பெரியாரின் பெயரை சூட்டவேண்டும், பெரியாரின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி பாடத் திட்டங்களில் பாடமாக வைக்க வேண்டும், சாதி மறுப்புத் திருமணம் விதவை மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு திருமண உதவித் தொகை வழங்கவும் அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும், மணவிலக்கு உறுதிப்படுத்த உரிய சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும், தனித்து வாழ விரும்பும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் தங்கும் விடுதிகள் அமைக்க வேண்டும், பெண்கள் மீதான வன்முறைகள் அவற்றை சுதந்திரமாக விசாரிக்கவும் வழக்கு பதிவு செய்யவும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், நீதிமன்றத்தையும் அநாகரிகமாக பேசிய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான எச் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும், சாந்தன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் வழிபாடுகள் நடத்த தடை இருந்தும் அதை நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடிய நிர்வாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் மனத்திலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசுகள் உரிய சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இக்கூட்டத்தில் கி.வீரமணி பேசுகையில், ‘’சமூக நீதி,சாதி ஒழிப்பு, பெண் அடிமைதனம் ஒழிப்பு இது தான் பெரியார் காண விரும்பிய இந்தியாவாக இருந்தது. 70 ஆண்டு சுதந்திரத்திற்கு பின்பும் படிக்க உரிமை கேட்டு போராடி கொண்டு இருக்கிறோம். செவ்வாய் கிரகத்துக்கே மனிதர்கள் செல்கிறார்கள், ஆனால் கோவில் கர்பகரகிரகத்திற்குள் இன்றும் அனைத்து மக்களும் செல்ல முடியவில்லை.

பெண்களை தொடர்ந்து அடிமையாக இந்த இந்த சமூகம் வைத்திருந்தது. ஆணுக்கு ஒரு நீதி ,பெண்ணுக்கு ஒரு நீதி என இருந்தது. இதை அடித்து உடைத்தவர் பெரியார்.

பெரியாரின் பார்வை விஞ்ஞான பார்வையாக இருந்தது. பெரியார் தன்னை மனிதனாக இருந்தே அனைத்து விஷயங்களையும் அணுகினார். நேருவால் நிறைவேற்ற முடியாத பெண்களுக்கான சொத்துரிமை சட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

உயர்சாதி,தாழ்ந்த சாதி கூடாது என்பது போல பெண் அடிமை தனமும் கூடாது என்றார் பெரியார். பெரியார் இந்த சமூகத்தை பண்படுத்தவே பாடுபட்டார். அவர் பேதமற்ற சமுதாயத்தை காண விரும்பினார்’’என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT