/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/129_18.jpg)
கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரோஸ் ஏற்கனவே கேரளா சிறையில் உள்ளவர்களை சந்தித்து பேசியது விசாரணையில் தெரியவந்தது.
தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளாவில் சிறையில் உள்ள ரசித் அலி மற்றும் முகமது அசாருதீன் போன்றோரைபெரோஸ் சந்தித்து உள்ளார். இதில் அசாருதீன் என்பவர் 2019ல் இலங்கை தேவாலயத் தாக்குதலுக்கு காரணமான அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும் சிறையில் அவர்களுடனான சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என பெரோஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரோஸ்ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபியாக இருக்கலாம் என கோவை காவல் துறையினர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)