அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து லாரியில் சிக்கி கால் முறிந்த ராஜேஸ்வரி! -ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தல்!

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்ததால், லாரியில் சிக்கி இளம் பெண் படுகாயம் அடைந்த விவகாரம் தொடர்பான முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 KOVAI;Rajeshwari's broken leg; Instructions on filing documents with documents!

கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் நாகநாதனின் மகள் ராஜேஸ்வரி என்கிற அனுராதா, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கணக்காளராக வேலைபார்க்கிறார். நவம்பர் 11-ஆம் தேதி காலை வேலைக்குச் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் பீளமேடு கோல்டுவின்ஸ் பகுதி வழியாகச் சென்றார். அப்போது, அந்தப் பகுதி சாலைத் தடுப்பில் கட்டப்பட்டிருந்த அதிமுக கொடிக்கம்பம் ஒன்று திடீரென்று சாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பார்த்த ராஜேஸ்வரி, தன்மீது கொடிக்கம்பம் விழாமல் தவிர்ப்பதற்காக திடீர் பிரேக் போட்டதால், நிலைதடுமாறிய நிலையில் தனது வாகனத்தோடு சறுக்கி கீழே விழுந்தார்.

 KOVAI;Rajeshwari's broken leg; Instructions on filing documents with documents!

அப்போது அந்த வழியாக வந்த லாரி ராஜேஸ்வரியின் கால் மீது ஏறியதில் இரு கால்களும் லாரி சக்கரத்தில் சிக்கி கால்கள் முறிந்து படுகாயம் அடைந்தார். அதேவழியாக வந்த விஜயானந்த் என்பவரும் லாரியின் பின்பக்கத்தில் மோதி காயம் அடைந்தார். ராஜேஸ்வரி தனியார் மருத்துவமனையிலும், விஜயானந்த் கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 KOVAI;Rajeshwari's broken leg; Instructions on filing documents with documents!

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தரப்பில் வழக்கறிஞர் அர்விந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் முறையிட்டு, அவசர வழக்காக விசாரிக்கும்படி கோரிக்கை வைத்தார்.

ஆனால்.. மனுவாக தாக்கல் செய்தால் பட்டியலில் வரும்போது விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர் குறிப்பிடும் சம்பவம் மற்றும் கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு, தகுந்த ஆவணங்களுடன் மனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினர்.

admk banners highcourt
இதையும் படியுங்கள்
Subscribe