Advertisment

குடியுரிமை மசோதா விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்... நடிகை கவுதமி பேட்டி 

குடியுரிமைசட்டத் திருத்த மசோதாவிவகாரத்தில் அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளாமல் வேண்டும் என்றேபிரச்சனை செய்கின்றனர் எனவும்,இந்த போராட்டங்களுக்கு போராட்டம் என பெயர் கொடுக்கலாமா என்றே யோசிக்க வேண்டும் என பாஜக நட்சத்திர பேச்சாளரான நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

Advertisment

உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான கௌதமி, கோவை காளம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது முன்னேற்றம் வேண்டும் என்றால் ஒற்றுமை தேவை அதற்கு மத்திய, மாநில அரசுகளும் ஒரே குரலில் பேசவேண்டும். ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்றார்.

Advertisment

actress gowthami interview

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகை கவுதமி, உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள்என நம்பிக்கை இருப்பதாவும், இதன் மூலம் நல்ல வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.

அன்றாட வாழ்வில், உள்ளூர் பிரச்சனைகளைதீர்க்கவே இந்த தேர்தல் என்றும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடைபெறும் போராட்டங்களால் இந்த தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தால்இந்தியர்களுக்கு எந்த ஆபத்தோ, பிரச்சனையோ இல்லை எனக் கூறிய அவர், இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொள்ளாமல் வேண்டும் என்றே பிரச்சனை செய்கின்றனர். இந்த தவறான புரிதலால் போராட்டங்கள் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த போராட்டங்களுக்கு போராட்டம் என பெயர் கொடுக்கலாமா என யோசிக்க வேண்டும் எனக் கூறினார்.

பல வளர்ச்சி நிலைகளை கணக்கில் கொண்டுதான் நல்லாட்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இது நியாமானது எனவும் அவர் தெரிவித்தார்.

kovai gowthami
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe