கோவை - திருப்பூரில் பல்வேறு விழாக்களில் கலந்துகொள்ள கோவை வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin kovai1_0.jpg)
திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இல்ல திருமண விழா மற்றும் கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.கண்ணப்பன் நூல் வெளியீட்டு விழா (வாழ்வும் பணியும்) ஆகிய விழாக்களுக்கு வருகை தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமானநிலையத்தில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin kovai2_0.jpg)
திமுக தலைவருடன், திமுக முதன்மை செயலாளர் டிஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடன் வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin kovai3_0.jpg)
வரவேற்பின்போது கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சிஆர்.இராமசந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளர்கள் திருப்பூர் செல்வராஜ், திருப்பூர் இல.பத்மநாபன்,
முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் நா.பழனிச்சாமி, இழித்துரை இராமசந்திரன், பொள்ளாச்சி பாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திராவிடமணி எம்எல்ஏ, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பைந்தமிழ்பாரி உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர்.
Follow Us