/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sri_3.jpg)
கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை செவிலியரின் கைதவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தது. உயிரிழந்த பச்சிளக்குழந்தையின் உடலை கையில் ஏந்தி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
விக்ரம் -பவித்ரா தம்பதியினருக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தை இறந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து குழந்தை இறந்து விட்டதாக கூறியதால் குழந்தையின் உடலை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இன்று குழந்தையின் உடலை அடக்கம் செய்ய சென்றபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மருத்துவமனையில் சென்று விசாரித்த போது குழந்தை பிறந்தவுடன் செவிலியர் குழந்தையை கையில் வைத்திருந்தபோது தவறி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இன்று உயிரிழந்த பச்சிளக்குழந்தையின் உடலை கையில் ஏந்தி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)