Skip to main content

கோவையில் வாகனங்களுக்கு ‘டி’மார்க் போட்ட போலீசார்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கோவை சிங்காநல்லூர் போலீசார் பலமுறை எச்சரித்தும்,  அறிவுரை கூறியும்,  வாகன ஓட்டிகள் வெளியே சுற்றிவருவது தெரிந்து போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  p


அப்போது வேலைக்கு செல்வோர்களைவிட வெளியில் சுற்றிய வாகனங்களே  அதிகம் இருந்தன. எங்கே செல்கிறீர்கள்..? என்ற கேள்விக்கு.. பழைய மருந்து சீட்டுகளை வைத்துக்கொண்டு மருந்து வாங்குவதாகவும், ஏற்கனவே அட்மிட் ஆகியிருந்த பழைய பைல்களை வைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதாகவும் சொன்னார்கள்.  
 

nakkheeran app



அனுமதியின்றி காய்கறிகள் விற்க, ஆம்னி கார்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் சுற்றிய சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்கள் பிடிபட்டனர்.  இவர்களிடம் எந்தவித அடையாள அட்டை இல்லை,  குறிப்பாக இந்த பகுதியில் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பதால் ராமநாதபுரம், பீளமேடு, வெள்ளலூர், காந்திபுரம், கணபதி பகுதியிலிருந்து பொருட்கள் வாங்க இங்கேதான் வருகிறார்கள்.

மேலும் இங்கே பிடிபட்ட இரண்டு சக்கர வாகனங்களுக்கு மற்றும் கார்களுக்கு போக்குவரத்து போலீசார், பெயிண்டில்T மார்க் போட்டு உள்ளார்கள். இதுவரை 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் போதிய ஆவணங்கள் இன்றி பிடிபட்டுள்ளன.


 

சார்ந்த செய்திகள்