kovai kutralam falls entry ticket incident 

Advertisment

கோவையில் உள்ள குற்றாலம் அருவியில் பணியிலிருந்தவனத்துறை அதிகாரி ஒருவர் நுழைவுக் கட்டணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கக் கூடியகுற்றாலம் அருவிக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் குற்றாலம் அருவிக்கு வரும்சுற்றுலாப்பயணிகளிடம்சுற்றுலா மேம்பாட்டிற்காக வனத்துறை சார்பில் நுழைவுக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இதில், பெரியவர்களுக்கு 60 ரூபாயும், குழந்தைகளுக்கு 30 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. மேலும் டூவீலர் பார்க்கிங்கிற்கு 20 ரூபாயும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு 50 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக கோவை குற்றாலத்தில் போலி ரசீது வழங்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்திருந்தார். இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தொடர் விசாரணையில், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனவராக பணியாற்றி வரும் ராஜேஷ்குமார் தான் இந்த மோசடியில்ஈடுபட்டது தெரிய வந்தது.

Advertisment

மேலும் போளுவாம்பட்டிமுன்னாள் சரக ரேஞ்சர் சரவணன் உதவியுடன் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து போலி நுழைவுச் சீட்டுகளை வழங்கி பல லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வனவர் ராஜேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து, அவரிடமிருந்து 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகராஜேஷ்குமாரை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.