Advertisment

கோவையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... காதலன், கால்டாக்சி ஓட்டுநர் கைது!!

kovai

கோவையில்17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் காதலனும், கால்டாக்சிஓட்டுநர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

கோவையைச் சேர்ந்த17 வயது சிறுமிஆன்லைன்வகுப்பிற்காக வாங்கப்பட்டமொபைல்ஃபோனில்முகப்புத்தகக்கணக்கு துவங்கியுள்ளார். அப்பொழுது ஏழுமலை என்ற நபர்முகப்புத்தகம்வழியாக அறிமுகமாகி, சிறுமியிடம்பழகியுள்ளார். ஏழுமலையை நேரில் சந்திக்கவிரும்பியசிறுமி,ஏழுமலையை சந்திக்கஉதவுமாறுஏழுமலையின்நண்பரானசண்முகவேல் என்ற கால்டாக்சிஓட்டுனரிடம் தெரிவித்துள்ளார். கால்டாக்சிஓட்டுநர் சண்முகவேல் அவரை கூட்டிச்சென்ற நிலையில், சிறுமியைக் காணவில்லைஎனசிறுமியின் பெற்றோர் போலீசில்புகாரளித்தனர்.

Advertisment

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு சிறுமியைத் தேடிவந்தனர். இந்நிலையில் திருச்சியில் மீட்கப்பட்டசிறுமி,தன்னை கூட்டிச்சென்றகால்டாக்சி ஓட்டுநர் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததையும், பின்னர்தான் ஏழுமலையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஏழுமலையும் தன்னை பாலியல்வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது சிறுமியைப் பாலியல்வன்கொடுமை செய்தகால்டாக்சிஓட்டுநர் சண்முகவேல் மற்றும் காதலன் ஏழுமலை ஆகியோர்போக்ஸோசட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Sexual Abuse kovai call taxi driver
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe