கோவையில் வனப்பகுதியில் மது அருந்திய இளைஞர்களை காட்டுயானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
கோயம்புத்தூர் வனக் கோட்டம், கோவை வனச்சரகம், துடியலூர் பிரிவு, தடாகம் வடக்கு பீட்டிற்கு வெளியே உள்ளதுதொப்பம்பட்டி கிராமம், அங்குவனப்பகுதியை ஒட்டியகண்பதி கார்டன் என்ற இடத்தில் நேற்றுஇரவு 8.30 மணி அளவில் விக்னேஷ் மற்றும் பிரேம் கார்த்தி ஆகிய இருவர் மது அருந்தி கொண்டிருந்தனர்.அப்போதுஅங்கு வந்தஆண் யானை ஒன்றுஅவர்களை விரட்டியது.
அப்போது உடனடியாக விக்னேஷ் என்பவர் தப்பித்து ஓடிவிட, அந்த யானை பிரேம் கார்த்தி என்பவரை மிதித்து கொன்றது. யானை மிதித்ததில் உயிரிழந்த பிரேம் கார்த்தியின்உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்குஅனுப்பி வைக்கப்பட்டது.