கோவை காட்டூரில் உள்ள இந்து முன்னணி அலுவகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகசெய்திகள் பரவ அனைத்து இந்து இயக்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிவிட்டன.
அதே சமயத்தில் SDPI கட்சி மாவட்ட செயலாளர், தகிர்இக்பால்ஏழு பேர் கொண்ட கும்பலால் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு காயமடைந்து ரெக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது மேல் சிகிச்சைக்காக அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என இஸ்லாமிய அமைப்புகளுக்கு தகவல் பரவ கோவை தீப் பிடித்துக் கொண்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அரசு மருத்துவமனையில்சிகிச்சையில் இருக்கும்தகிர்இக்பால் உடல் நலம் விசாரிக்க பதறியடித்து வந்தார் மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தஜவாஹிருல்லா,
சி.ஏ.ஏ, என்.பிஆர், என்.ஆர்.சி ஆகியவற்றிற்குஎதிராக போராடுபவர்களை அச்சுறுத்தும் வகையில் காவல்துறை செயல்படுகின்றது. பா.ஜ.க தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறுபான்மை மக்கள் மீது வன்முறை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர் .
இவர்கள் மீது டி.ஜி.பியை சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் கோவையில் பேசிய "அய்யாவழி பாலமுருகனை" கைது செய்கிறார்கள். கோவையில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை கண்டிக்கின்றோம். இந்து முன்னணி நிர்வாகி ஆனந்தை தாக்கிய உண்மை குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யவேண்டும். கண்காணிப்பு கேமரா அனைத்து பகுதிகளில் இருக்கும் நிலையில் இந்து முன்னணி அலுவலகம் தாக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
அதேசமயம் இந்து முன்னணியினர் மீதும்,இந்து முன்னணி அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டு வீசியவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் சிவானந்தா காலனியில் இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடை பெறுவதை ஒட்டி போலீசார் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர்.