Advertisment

பொள்ளாச்சியில் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறிக்கும் கும்பல் 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஒருவார காலமாக பெண்களை காதலிப்பது போல் நடித்து ஆபாச வீடியோக்களை எடுத்து அவற்றை வைத்துக்கொண்டு அவர்களுடைய குடும்பத்தாரிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்த ஒரு கும்பல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட ஒரு பெண் தைரியமாக நடந்ததை சொன்ன காரணத்தினால் பொதுமக்கள் நேரடியாக ஈடுபட்டு குற்றவாளிகளை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

Advertisment

k

அந்த குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசியிலிருந்து நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்துபோய் அதை காவல்துறையிடம் கொடுத்திருக்கிறார்கள். விசாரணையில் பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து அவர்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதிகார மையத்தில் இருக்கின்ற பலபேர் இதை பின்னணியிலிருந்து இயக்கியதாகவும் அவர்களுக்கும் இதில் நேரடி தொடர்பு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

Advertisment

அதிகாரத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவதற்காக காவல்துறை அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொள்வதை பார்த்து பொள்ளாச்சி மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். நடந்திருக்கின்ற நிகழ்வு என்பது தமிழகத்தையே உலுக்குகின்ற ஒரு குற்றம். கொலை குற்றத்தைவிட கொடியது. இதில் சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற நினைத்தால் தமிழகத்தில் பெண்கள் பயம் இல்லாமல் நடமாடுவது கேள்விக்குறியாகி போகும். காவல்துறை பாரபட்சம் பாராமல் துரித நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் சார்பாகவும், ஆளுங்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பாகவும் காவல்நிலையம் முற்றுகையிடப்படும். இதை போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து பல நடந்தாலும் கல்லூரியில் படிக்கின்ற பெண்கள் ஒரு காரணமும் இல்லாமல் மாயையை நம்பி ஏமாறுவது தொடர் நிகழ்வாக இருக்கிறது. இனியும் பள்ளி, கல்லூரிக்கு போகும் பெண்கள் எச்சரிக்கையாக இல்லையென்று சொன்னால் யாரும் காப்பாற்ற முடியாது.’’

pollachi eswaran kovai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe