kovai child vaccine incident Interview with the Secretary of Health

தர்மபுரியைச் சேர்ந்தபிரசாந்த் - விஜயலட்சுமி தம்பதியினர், கோவை மசக்காளிபாளையத்தில் தங்கி வேலைசெய்து வருகின்றனர். பிரசாந்த் அந்தப் பகுதியில் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குகிஷாந்த் என்ற மூன்று மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கிசாந்துக்கு நேற்று முன்தினம்(17.02.2021)அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமில்பெண்டவேலன்ட், ரோட்டாவைரஸ் தடுப்பூசி,போலியோ சொட்டுமருந்துபோட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்டுவீட்டிற்குச் சென்றசில மணிநேரத்தில்குழந்தை மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர், குழந்தையைக் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாகஉயிரிழந்தது.

Advertisment

தடுப்பூசி காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுதொடர்பாக கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த குழந்தை கிஷாந்தின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisment

kovai child vaccine incident Interview with the Secretary of Health

“அந்தக் குறிப்பிட்ட அங்கன்வாடி மையத்தில் நேற்று இதேபோன்று 13 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளன. இந்த ஒரு குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. எனவே பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே இதில் உயிரிழப்புக்கான உண்மை தெரியவரும்” என முன்னரே சுகாரத்துறை அதிகாரிகள் தரப்பு கூறியிருந்த நிலையில், பிரேதப் பரிசோதனைக்குப் பின் நேற்று (18.02.2021) சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “தடுப்பூசி போடப்பட்ட குழந்தை உயிரிழந்தது நிமோனியா காய்ச்சலால்தான். தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சவுரிபாளையத்தில்வெற்றிமாறன் என்ற இரண்டரை வயது குழந்தைக்கு மசக்காளிபாளையம்துணை சுகாதாரநிலையத்தில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அந்தக் குழந்தைக்கும் திடீரெனஉடல்நலக்குறைவு ஏற்பட, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது.

Advertisment

kovai child vaccine incident Interview with the Secretary of Health

தடுப்பூசி போட்டப்பிறகுஇரண்டு குழந்தைகள் அடுத்தடுத்துஉயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுதொடர்பாகதனி மருத்துவர்கள் குழு விசாரிக்கும் என தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துபேசுகையில், ''ஒரு குழந்தை 15 மணிநேரத்திற்குள் இறந்திருக்கிறது. மற்றொரு குழந்தை 5 மணி நேரத்தில் இறந்திருக்கிறது. இந்த நேரத்தில் நாம் கவனிக்க வேண்டியது, குறிப்பிட்ட அந்த சுகாதார மையங்களில் இதே பேட்ச்சில்தடுப்பூசி போட்டுக்கொண்ட10 குழந்தைகளும், 13 குழந்தைகளும் நலமாக உள்ளன. ஒருவகையில் இது நமக்குப் பாதுகாப்பு. ஆனால் இன்னொரு கோணத்தில், இந்த இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு குறித்து கமிட்டி முழுவதும் ஆராய்ந்துகொடுக்கும் தகவலின் அடிப்படையில்தான் சொல்ல முடியும். காய்ச்சல் இருப்பதுதெரிந்தும்தடுப்பூசி போடப்பட்டதா எனமாவட்ட அளவிலான கமிட்டி மற்றும் மாநில அளவிலான கமிட்டி சேர்ந்து முழுமையாக விசாரிப்பார்கள்'' என்றார்.