Skip to main content

  கோவை முதல் சென்னை வரை பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம்

Published on 17/12/2018 | Edited on 17/12/2018
c


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரை சந்திக்க விவசாய சங்கத்தினர்  கோவை முதல் சென்னை வரை பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவையில் இருந்து சென்னை வரை பனை தென்னைகளை பாதுகாக்க வலியுறுத்தி பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி கோவை கோபாலபுரம் பகுதில் உள்ள விவசாய சங்கத்தின் மாவட்ட தலைமை அலுவலகத்திலிருந்து தொடங்கியது.  இந்த பயணத்தை தமிழ்நாடு கள் இயக்கம் கள ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி தொடங்கி வைத்தார்.

 

 இந்த பரப்புரை பயணம் ஆனது திருப்பூர் ஈரோடு சேலம் உட்பட பல மாவட்டங்கள் வழியாக சென்னை சென்று வரும் 19ம் தேதி முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கையான கள் இறக்க வதம் பருகுவதும் அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை.  எனவே முப்பதாண்டு காலமாக உள்ள கள் தடையை நீக்க வேண்டும், நிபந்தனையில்லாமல் நீரா இறக்கி உள்நாட்டிலும் உலக அளவிலும் அரசியல் தலையீடு குறுக்கீடு இல்லாமல் சந்தைப்படுத்த வேண்டும்.

 

 மீராவை மூலப்பொருளாகக் கொண்டு y 23 ஈஸ்ட் மூலம் கொதிக்க வைத்து பெறப்படும் மல்லிகைப்பூ மரத்திலான கலை உலக அளவில்  அன்னிய செலவாணி ஈட்டுவது மற்றும் பனை தென்னை கருப்பட்டிக்கு மானியம் கொடுத்து ரேஷன் கடைகளை விநியோகித்தல் மதுவிலக்கு கொண்டுவரப்படும் வரை பனை தென்னை பொருட்களிலிருந்து தரமான டாஸ்மாக் விற்பனை மக்கள் தயாரித்தல் படுப்பதற்கு கூடுதலான நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் 2011ல் முடக்கப்பட்ட பனைத் தொழிலாளர் நலவாரியம் தென்னை விவசாயிகள் நல வாரியத்தில் ஸ்ரீவல்லிபுத்தூர் பனை ஆராய்ச்சி செய்யும் போது முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கல் தடையை கண்டித்து 2019 ஜனவரி 21 இல் சென்னையில் நடைபெறும் அசுவமேத யாகம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனை தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணம் கோவையில் தொடங்கியது.   இந்த பயணமானது திருப்பூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் சென்றடைந்து அங்குள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி சென்னையில் வரும் 19ஆம் தேதி முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை முன் வைக்க உள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்