ச்

Advertisment

கோவை சௌரிபாளையத்தில் 48 வயதான ஏஞ்சலீன் மேரி தனது மகனுடன் வசித்து வருகிறார்சர்க்கரை நோயால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த இவர்,கடந்த சில நாட்களுக்கு முன், நோய் தீவிரமானதை அடுத்து இவரின் கால்களின் நான்கு விரல்கள் எடுக்கப்பட்டன.

தொடர்ந்து உடல்நிலை மோசமானதை அடுத்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஞ்சலீன் மேரிக்கு, ஊசி மற்றும் மருந்து கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.ஆனால், அறுவை சிகிச்சை அளித்தால் மட்டுமே நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நிலையில், கொரோனா சிகிச்சை தான் எங்களுக்கு முக்கியம்.அதனால் அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவமனை மறுத்திருக்கிறது.

Advertisment

ஊரடங்கு காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருப்பதாலும், பொருளாதார சூழல் காரணமாக பணம் இல்லை. அரசு மருத்துவமனையைத் தவிர வேறு வழியில்லை என ஏஞ்சலீன் மேரி குடும்பத்தினர் சொல்லியும் கேட்கவேயில்லை மருத்துவமனை.இதை அறிந்த மீடியாக்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் விசயத்தைக் கொண்டு சென்றது.

உடனடியாக, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனை தொடர்பு கொண்ட மினிஸ்டர் வேலுமணி, எந்தவித தாமதமுமின்றி ஏஞ்சலீன் மேரிக்கு சிகிச்சை அளிக்கவும், கொரோனா காரணமாக மற்ற எந்த சிகிச்சையும் பாதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, ஜி.ஹெச் நிர்வாகம், ஏஞ்சலீன் மேரியை உடனடியாக மருத்துவமனைக்குள் அழைத்து, அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றது.