Skip to main content

சிபிசிஐடி எஸ்.பி-க்கு வாழ்த்து ப்ளக்ஸ் வைத்த சாதிக்காரர்கள்!

Published on 07/08/2019 | Edited on 07/08/2019

 

      நாங்கள் சாதி பார்ப்பதில்லை.! காவல்துறையில் சாதி இல்லை என போலீசார் மார் தட்டிக்கொண்டாலும், " அவம் எம் சாதிப்பா.!" என ஊர் முழுக்க தம்பட்டம் அடித்து, சாதி ப்ளக்ஸ் அடித்து  அதிகாரியை கொம்பு சீவியுள்ளனர் அவர் சார்ந்த சாதிக்காரர்கள்.

 

c

   

கோவை மாவட்டத்தில் தலைமையிட கூடுதல் எஸ்பியாக இருந்து பதவி உயர்வுப்பெற்று எஸ்ஐடி- சிபிசிஐடியாக சென்னையில் பணியாற்றி வரும் ம.மாடசாமி திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்தவர்.

 

c

 

"பதவி உயர்வுப்பெற்று நம் நகருக்கு பெருமை சேர்த்த மகாலிங்கத் தேவரின் புதல்வர் மாடசாமி மென் மேலும் வளர வாழ்த்துகள்." என வாசுதேவநல்லூர் தொடங்கி நெற்கட்டும் சேவல் வரை ப்ளக்ஸ் போர்டு வைத்து எஸ்.பிக்கு விசுவாசம் காட்டியுள்ளனர் அந்த ஊர் மக்கள்.

 

c

 

அந்த ப்ளக்ஸ் போர்டு தான் இப்பொழுது பிரச்சனையாகியிருக்கின்றது.? இதில் என்ன பிரச்சனையென்றால் ப்ளக்ஸ் போர்டு வைத்தவர்கள் அனைவரும் அவர் சார்ந்த சாதிக்காரர்களே.!!  " எம் சாதிக்குன்னு ஒரு பட்டம் இருக்குல்ல.! அதைப் போட்டு ப்ளக்ஸ் போட்டால் என்ன தவறு இருக்கு.? அவரு பதவியில் இருந்தால் அவருக்கு சாதி இல்லாமல் போகுமா.?" என தங்கள் தரப்பிற்கு நியாயம் கற்பிக்கின்றார்கள் எஸ்.பி.சார்ந்த சமூகத்தினர்.

 

c

 

இந்த ப்ளக்ஸ் பிரச்சனை மாவட்ட எஸ்.பி.க்கு செல்ல அவசரம் அவசரமாக ப்ளக்ஸை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் சொந்த சமூகத்தினரிடம் வாழ்த்துப்பெற்ற எஸ்ஐடி- சிபிசிஐடி எஸ்.பி. மாடசாமியோ ப்ளக்ஸ் விவகாரம் பற்றி வாய்திறக்கவில்லை இதுவரை..! இதனால் காவல்துறையினர் மத்தியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்