Advertisment

கோவை சோகம்! தாய், மனைவி, பிள்ளைகளைக் கொன்றுவிட்டு அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை!

a

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசுப் பள்ளி ஆசிரியர் அந்தோணிதாஸ், தன் மனைவி ஷோபனா, குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தனது அம்மா புவனேஸ்வரி ஆகிய நால்வருக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Advertisment

l

‘இந்த வீடு ஆசீர்வதிக்கப்பட்ட வீடு’ என்று அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் 12 வருடங்கள் முதுகுவலியால் அவஸ்தைப்பட்டு வந்ததாகவும், குடும்பத்தினரை இந்த உலகத்தில் தனியாக விட்டுச் செல்ல மனமில்லாததாலும், இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். தயவு செய்து என்னை மன்னியுங்கள் என்று சிலரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கும் அவர், கடன் விபரங்களைச் சொல்லிவிட்டு, ஆவியாக வந்து நாங்கள் யாருக்கும் தொந்தரவு தரமாட்டோம் என்றும் எழுதியிருக்கிறார்.

Advertisment

அந்தோணிதாஸ் எழுதிய கடிதத்தையும், 5 பேர் உடல்களையும் கைப்பற்றியிருக்கும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

anthoni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe