Advertisment

உரிமையாளர் திட்டியதால் கோவித்து கொண்ட பச்சைக்கிளி அம்மன் கோவிலில் தஞ்சம்

a

கோவையில் உரிமையாளர் திட்டியதால் கோவித்து கொண்ட பச்சை கிளி அம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தது. ஒரு நாளுக்கு மேலாக அம்மன் சிலையில் அமர்ந்திருக்கும் கிளியை பொது மக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Advertisment

கோவை பாப்பநாய்க்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகேசன். இவர் கடந்த ஒரு ஆண்டாக ஒரு பச்சை கிளியை வீட்டில் வளர்த்து வந்தார். இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை வெள்ளை அடிக்கும் பணியை செய்தார். இதற்கு இடையூறாக சுற்றி வந்த கிளியை முருகேசனின் மகன் திட்டி உள்ளார். இதனால் கோபம் அடைந்த கிளி வீட்டில் இருந்து பறந்து சென்றது. இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் கிளி கிடைக்கவில்லை. இதனிடையே கோபித்து கொண்ட கிளி அருகே உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தது.

Advertisment

a

மாரியம்மன் சிலை மீது ஏறி அமர்ந்த கிளி அவ்விடத்தை விட்டு நகராமல் அதன் மீது அமர்ந்து உள்ளது. கோவில் பூசாரி அம்மன் சிலையை அலங்கரித்த போது கோவில் மண்டபதிற்கு சென்ற கிளி மீண்டும் அம்மன் சிலையின் வலது தோள்பட்டை மீது வந்து அமர்ந்தது.

இது குறித்து அறிந்த முருகேசன் குடும்பத்தினர் வந்து அழைத்த போதும் செல்லாமல் சிலை மீதே அமர்ந்து வர மறுக்கிறது. இதனை தொடர்ந்து கோவில் பூசாரி ஹரிபிரசாத் அம்மன் சிலைக்கு மீனாட்சி அலங்காரம் செய்தும் கிளிக்கு தேவையான மிளகாய்,கொய்யா உள்ளிட்ட உணவுகளை கிளிக்காக வைத்து உள்ளார்.

a

ஒரு நாளுக்கு மேலாகியும் அம்மன் சிலையை விட்டு நகர மறுக்கும் கிளியை சுற்று வட்டார பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

amman kovai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe