சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் அவர் வண்டியிலிருந்த மூன்று பைகளையும் கீழே போட்டுவிட்டு வண்டியை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அந்த பைகளை சோதனையிட்டபோது, அதில் ஒரு கோடியே 56 இலட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்துள்ளது. அந்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
1 கோடியே 56 இலட்சத்தை சாலையில் போட்டுவிட்டு ஓடிய நபர்!!!
Advertisment