Skip to main content

கலையிழந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம்!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

காஜா புயல் பாதிப்புக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்திற்கு குறைந்த அளவே பறவைகள் வந்து செல்வதாக வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும், வெகுவாக கவலையடைய செய்துள்ளது.

 

 Kotiyakarai Bird Sanctuary

 

நாகை மாவட்டம்  வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருக்கிறது பறவைகள் சரணாலயம். அங்கு ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து போவது வழக்கம்.

 

இதுகுறித்து கணக்கெடுப்பு பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், " மழைக்காலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைகாலம் துவங்கும் மார்ச் மாதம் வரையிலும் கோடியக்கரையில் தங்கி சீசனை முடித்துக்கொண்டு தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். சைபீரியா, ஈரான் ,ஈராக் ,நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பறவைகள் வருகைதந்து சுற்றுளாபயணிகளை மகிழ்விற்கும்.  4 அடி உயரமுள்ள அழகிய பூநாரையே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிசிறப்பு சேர்க்கும்.

 Kotiyakarai Bird Sanctuary

 

கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை பர்மாவில் இருந்து சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம் என 247 வகையான பறவைகள் இங்கு ஆண்டு தோறும் வந்து செல்லும்.

 

 247 வகையான பறவைகளில் 50 வகை நிலப்பபறவைகளும் 200க்கு மேற்பட்ட நீர் பறவைகளும் வந்து போவது வழக்கம். இதில் ஆலா மற்றும் கிரீன்சன்ங் உள்ளிட்ட ஆறு வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சுபொரித்து, குஞ்சிகளோடு செல்லும் மற்ற அனைத்து பறவை வகைகளும்  சீசன் காலத்தில் தங்கிவிட்டு மட்டுமே செல்லும். முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் முதலாவது குஞ்சுப்பறவைகளை தன்னுடைய சொந்த நாட்டிற்கு இயற்கையின் தூண்டுதலால் அனுப்பிவிடும், அதன்பிறகே தாய் பறவைகள் செல்லும். இப்படி உண்ணதமான சரணாலயம் சேதமாகியதால் கலையிழந்துக்கிடக்கிறது. அதனால் பறவைகளின் வரவும் குறைந்துவிட்டது."என்கிறார் அவர்.

 

கோடியக்கரையில் பறவைகள் சரணாலத்தைப்போல் விலங்களுக்கான சரணாலயமும் சிதைத்துள்ளது. அங்குள்ள மீனவர் ஒருவர் கூறுகையில், " எங்க ஊருக்கான சிறப்பு பறவைகள் சரணாலயமும் விலங்குகள் சரணாலயம் தான். அதன் பிறகுதான் மீன்பிடித்தொழில். எங்களுக்கான வாழ்வாதாரம் அழிந்தது ஒருபுறம் இருந்தாலும்  புயலால் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிந்துவிட்டன. அதனால் பறவைகளுக்கான சுதந்திரம் மற்றும் சுகபோக நிலை மாறிவிட்டது. அதனால் வந்த பறவைகள் அனைத்துமே இடம்பெயர்ந்து விட்டன.  தற்போது உள்ளூர் பறவைகளையும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் இங்கேயே தங்கியிருக்கும் பறவைகளை மட்டும்  கணக்கெடுக்கிறாங்க. 

 

"கஜாபுயல் பொதுமக்களை மட்டும் நாசப்படுத்தவில்லை விலங்குகளையும் பறவைகளையும் சேர்த்தே அழித்து விட்டு சென்றிருக்கிறது. கோடியக்காடு பழமையான நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் ".என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவிலேயே காணக் கிடைக்காத அரியவகை பறவை; கன்னியாகுமரியில் கண்டுபிடிப்பு

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
rare bird that came to Kanyakumari from abroad

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறவைகள் தமிழகத்திற்கு வலசை வருவது வழக்கம். இவ்வாறு வலசை வருகின்ற பறவைகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு சரணாலயங்களுக்கு சென்று தஞ்சமடைகின்றன. இவ்வாறு வலசை வருகின்றதை கொண்டாடும் வகையில் உலக பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. பூமியின் வடகோளத்தை சேர்ந்த பறவைகள், அங்கு பனிப் பொழிவு தொடங்கும் போது, உணவு மற்றும் இதமான தட்பவெப்பம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அப்போது, உணவு மற்றும் தட்ப வெப்ப சூழல் முறையாக இருக்கும் பகுதிகளை நோக்கி பறக்க ஆரம்பிக்கும்.

இவ்வாறு இடம் பெயர ஆரம்பிக்கும் பறவைகள் இந்தியாவிற்கும் வருவது வழக்கம். அதன் பின்னர், சில மாதங்களுக்கு பிறகு வடகோளத்தில் பனிப் பொழிவு குறைந்து, பகல் பொழுது அதிகரிக்கும். அந்த சமயத்தில், இடம் பெயர்ந்து வந்த பறவைகள் அனைத்தும் மறுபடியும் அதனதன் பகுதிக்கு சென்றுவிடும். இவ்வாறு பறவைகள் வலசை வருவது சங்க இலக்கிய காலம் தொட்டு காணப்படுகிறது. இதற்கு சான்றாக பல சங்க இலக்கிய பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனை வளாகத்திற்கு இந்தியாவில் காணப்படாத அரிய வகை பறவையொன்று வந்துள்ளது. பார்ப்பதற்கு ஆந்தை வகையைப் போல இருந்த அந்தப் பறவை தனது உடலில் காயத்தோடு ஆபத்தான நிலையில் அமர்ந்துள்ளது. இதனைக் கண்ட காகம் உள்ளிட்ட மற்ற பறவைகள் இந்த அரிய வகை பறவையை அங்கே அமரவிடாமல் துரத்தியுள்ளன. பின்னர், அங்கு வந்த அரண்மனை ஊழியர்கள் இதனைக் கவனித்துள்ளனர். உடனே காகம் உள்ளிட்ட பறவைகளை துரத்திவிட்டு, அந்த அரிய வகைப் பறவையை காப்பாற்றியுள்ளனர்.

பின்னர், இந்த அரண்மனைக்கு அருகிலேயே இருக்கும் உதயகிரி கோட்டை பல்லூயிரின பூங்காவிற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துள்ளனர். அப்போது அந்தப் பறவையைப் பார்த்த பூங்காவில் உள்ள நிர்வாகிகள், இது அயல் நாட்டில் வாழ்கின்ற அரியவகை ஆந்தை இனம் எனக் கூறியுள்ளனர். அதன் பின்னர், காயத்தோடு இருந்த அந்தப் பறவைக்கு சிகிச்சையளிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பூங்கா ஊழியர்களிடம் கேட்ட போது, அந்தப் பறவைக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் பறக்க முடியாத நிலையில் உள்ளது. அதன் காயம் குணமாகும் வரை, அவற்றை உதயகிரி கோட்டை பல்லுயிரின பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்துள்ளோம். அந்தப் பறவை குணமடைந்த பிறகு அதனை திறந்து விடுவோம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பறவை ஆர்வலர்களிடம் கேட்ட போது, பொதுவாக ஏப்ரல், மே மாதங்களின் போது பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் இந்தியாவிற்கு வருவது வழக்கம். இவ்வாறு வருகின்ற சில அரிய வகை பறவைகளை இங்குள்ள பறவைகள் கொத்தி காயப்படுத்தும் நிகழ்வுகளும் நடந்து விடும். பின்னர், இங்கு சில மாதங்கள் தங்கிவிட்டு மறுபடியும் அவைகள் வசித்த நாட்டுக்கே மறுபடியும் பறந்து விடும். இவ்வாறு பறவைகள் வலசை வந்து திரும்பும் நாளை ஆண்டு தோறும் மே, 10, 11 ஆம் தேதி உலக வலசை பறவைகள் தினமாக கொண்டாடுகின்றனர். உணவு தேடலுக்காக, தென்பகுதிக்கு சென்ற பறவைகள், வடபகுதிக்கு திரும்பும்போது, அவற்றை வரவேற்கும் விதமாக, அமெரிக்கர்கள் இந்த நாளை கொண்டாடுகின்றனர். நம் நாட்டில், வலசை வரும் பறவைகளை வரவேற்க, தனியாக எந்த நாளும் கடைபிடிப்பது வழக்கமில்லை எனக் கூறுகின்றனர்.

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.