கோத்தகிரி பகுதியை சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவில் 7 அரசு மதுபான கடை, 5 தனியார் பார்கள் உள்ளன. இந்நிலையில் குடியிருப்பு நிறைந்த சக்தி மலைச்சாலையில் புதிதாக மேலுமொரு டாஸ்மாக் கடை வர உள்ளதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Advertisment

kothagiri tasmac issue

1300 குடும்ப அட்டைகளை கொண்ட நியாய விலை கடையின் பக்கத்தில் டாஸ்மார்க் கடை வருவதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இப்பகுதியில் 5 சர்ச்சுகளும், பாலிடெக்னிக் கல்லூரியும், பள்ளிகள் ,அரசு அலுவலங்கள் ஆகியவை உள்ளன. மாவட்ட நிர்வாகம் டாஸ்மார்க் கடை வராமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தவறும்பட்சத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

Advertisment