கோத்தகிரியில் கிரீன் வேலி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

kothagiri police arrested gamblers

கோத்தகிரியில் கிரீன் வேலி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், மார்டின் லூதர் ,போஜராஜன் ஆகியோர் தலைமையில் போலீஸ் சோதனை நடத்தியபோது, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபு (35), வினோத்குமார் (39), கோத்தகிரியை சேர்ந்த அப்துல் மஜீத் (51), யுவராஜ் (52), சங்கர் (39,) சேலூர்மட்டம் சேர்ந்த கார்த்திகேயன் (50 ), மற்றும் விடுதி உரிமையாளர் ராஜா (52) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸார் கைது நடவடிக்கையின் போது கோத்தகிரியே சேர்ந்த ராபர்ட் (35), குன்னூர் ஒட்டுப்பட்டறையே சேர்ந்த விவேக் ஆகியோர் தப்பி சென்று விட்டனர் .அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .மேலும் இதே பகுதியில் இதுபோல பல்வேறு விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாகவும், காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment