Advertisment

கோசாலை ஊழியர் திடீர் உயிரிழப்பு

 Kosala employee incident in erode

Advertisment

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயில், காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனிசாமி (52). இவருக்குத்திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 15 ஆண்டுகளாக பழனிசாமி, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். பழனிசாமி கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு, கருங்கல்பாளையம், குயிலான் தோப்பு பகுதியில் உள்ள கோசாலையில் தங்கி மாடுகளைப் பராமரிக்கும் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் தன்னுடன் வேலை பார்க்கும் நபரிடம், வயிறு வலிப்பதாகக் கூறிகுடிக்கத்தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீரை வாங்கிக் குடித்தவுடன் பழனிசாமி அதே இடத்தில் சுருண்டு விழுந்துவிட்டார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதித்துப் பார்த்துவிட்டு பழனிசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து, பழனிசாமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

incident Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe