நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு எண்ணும் பணி 2ஆம் நாளாகவும் தொடர்கின்றது. இதில் யூனியன் கவுன்சிலர்கள் முதல் மாவட்ட கவுன்சிலர்கள் வரை ஆளும் அதிமுகவை விட அதிகமாக, எதிர்க்கட்சியான திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகிறது.

Advertisment

இந்தநிலையில் நடந்து முடிந்த 27 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தேர்தலில் அதிமுக பதிமூன்று மாவட்டங்களையும் திமுக 14 மாவட்டத்தில் வெற்றிபெற்று மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது.

Advertisment

  kongu amdk MLAs enthusiastic

அதிமுக என்கிற கட்சிக்கு உயிர் கொடுப்பதே எங்கள் கொங்கு மண்டலம்தான். முதலமைச்சராக இருக்கிற எடப்பாடியார் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவரின் நிர்வாகத் திறமைக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் அங்கீகாரம் வழங்கியுள்ளது என கொங்கு மண்டல அதிமுக எம்எல்ஏக்கள் உற்சாகமாக கூறுகிறார்கள். அவர்கள் கூறும் மற்றொரு புள்ளிவிவரம் அவர்களின் வார்த்தையை உறுதிப்படுத்துகிறது.

பாமக கூட்டணியோடு வட மாவட்டத்தில் 2 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை தாங்கள் பிடித்துள்ளோம் ஒன்று அரியலூர் மற்றொன்று கடலூர். அடுத்து பார்த்தால் பாஜக ஆதரவோடு ஓரிடத்தில் அதிகம் பெற்று கன்னியாகுமரியை கை பெற்றிருக்கிறோம் மற்றபடி தென் மாவட்டத்தில் தூத்துக்குடி தேனி விருதுநகர் என்ற இந்த மூன்று மாவட்டம்தான் அதிமுக வசம் வந்திருக்கிறது. ஆனால் கொங்குமண்டலம் அப்படி அல்ல ஒட்டு மொத்தமாக அள்ளிக் கொடுத்துள்ளது.

Advertisment

  kongu amdk MLAs enthusiastic

இங்கு நாங்கள் வெற்றிபெற்ற பட்டியலைப் பாருங்கள் என அவர்கள் பட்டியல் போட்டார்கள். கோவையில் மொத்தமுள்ள 18 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் 12 பேர் அதிமுக. அதேபோல் திருப்பூரில் மொத்தம் உள்ள 17 கவுன்சிலர்களில் 12 பேர் அதிமுக. அடுத்து ஈரோட்டில் 19 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் 14 பேர் அதிமுக.

சேலத்தில் முதல்வர் எடப்பாடியாரின் சொந்த மாவட்டத்தில் மொத்தம் 20 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், அதில் 13 பேர் அதிமுகவினர் தான். அதேபோல் நாமக்கல்லில் மொத்தம் உள்ள 17 ல் 13 ஐ நாங்கள் பிடித்துள்ளோம். அடுத்து கரூர் இங்கு 12 மாவட்ட கவுன்சிலர்கள் அதில் 9 பேர் அதிமுகவினர். அடுத்து தர்மபுரியில் 18 கவுன்சிலர்கள் 11 பேர் அதிமுகவினர் இப்படி கொங்கு மண்டலத்தில் உள்ள மொத்தம் 8 மாவட்டங்களில் நீலகிரி மாவட்டத்தை தவிர்த்து மற்ற 7 மாவட்டத்தையும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று 7 மாவட்ட ஊராட்சி தலைவர்களும் அதிமுகவினர்தான். ஆக எங்கள் கட்சியான அதிமுகவிற்கு கொங்கு மண்டலம்தான் இப்போதும் உயிர் கொடுத்துள்ளது.

  kongu amdk MLAs enthusiastic

அதற்கு காரணம் அண்ணன் எடப்பாடிதான். இனிமேலாவது தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் அண்ணன் எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்துவார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்றனர்.

கொங்கு மண்டல அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூறுவது துணை முதல்வர் ஓ.பி.எஸ்.கோஷ்டி இந்த தேர்தலில் டம்மி என நிரூபிக்கப்பட்டது என்பதுதான்.