
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்கு பகுதி நீண்டு கிடக்கிறது கல்வராயன்மலை. இந்த மலையில் இருந்து உற்பத்தியாகும் ஆறுகள் மணிமுத்தாறு அணை கோமுகி ஆறுகள் இதன்மூலம் விழுப்புரம் கடலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் மக்களின் குடிநீர் தேவைகளையும் விவசாயத்தையும் காப்பாற்றி வருகிறது. சுமார் 70 கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளது.
அதில் கோமுகி அணை ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தற்போது அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது மழை நீர் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மலையிலிருந்து வரும் காட்டாறுகள், ஓடைகள்மூலம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், தற்போது பெய்துள்ள மழை விவசாயிகளை பெரும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.