Advertisment

குமரியில் பரவும் ''கோமாரி''-100க்கும் மேற்பட்ட பசுக்கள் இறப்பு!!

குமாி மாவட்டத்தில் கோமாாி நோய் தாக்குதலால் 100 க்கு மேற்ப்பட்ட பசு மாடுகள் பாதிக்கப்பட்டு உயிாிழந்துள்ளன.

Advertisment

இயற்கையையொட்டி வாழும் குமாி மாவட்டத்தில் பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, தாழக்குடி, செண்பகராமன் புதூா், வெள்ளமடம், சீதப்பால், மயிலாடி, தேரூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்ப்பட்ட பசு மாடுகள் வளா்க்கப்படுகிறது. இதில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு கோமாாி நோய் தாக்கி ஏராளமான பசு மாடுகள் பாதிக்கப்பட்டு உயிாிழந்தன.

Advertisment

cow

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்தநிலையில் தற்போது மீண்டும் அந்த கோமாாி நோய் பசு மாடுகள் மற்றும் கன்றுகளை தாக்கியுள்ளது. இதனால் கால் மற்றும் வாய் பகுதிகளில் புண் ஏற்பட்டு உணவுகளை உட்கொள்ள முடியாமல் பசு மாடுகள் அவதிப்படுகின்றன. இதில் பல மாடுகள் உயிாிழந்து பால் உற்பத்தி அளவு வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் உற்பத்தியான பாலை கூட்டுறவு மையங்களுக்கு கொண்டு சென்றால் கோமாாி நோயால் நஞ்சு கலந்திருக்க கூடும் என கூறி விவசாயிகளை திருப்பி அனுப்புவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

cow

கால்நடை மருத்துவமனைகளில் கோமாாி நோயை கட்டுபடுத்த போதுமான மருந்துகள் இல்லாததால் மாடுகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவா்களும் முன் வரவில்லை. இதேபோல் அந்த நோய்க்கான தடுப்பு ஊசிகளும், மருந்துகளும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள மாடுகளுக்கு மட்டும் போடுவதாகவும் மருத்துவர்கள் மீது குற்றச்சாட்டு கூறுகின்றனா் அப்பகுதி விவசாயிகள்.

எனவே மாவட்ட நிா்வாகம் விரைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கோமாாி நோய் தாக்குவதை தடுக்க வேண்டுமென்றும் இறந்து போன பசு மாடுகளுக்கு இழப்பீடும் வழங்க வேண்டுமென்று விவசாயிகள் கோிக்கை எழுப்பியுள்ளனா்.

.

cow Kanyakumari
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe