Advertisment

கடலூரில் மருத்துவர்கள் போராட்டம்; நோயாளிகள் அவதி!

kolkata medical student protest for justice in Cuddalore district govt medical college

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

kolkata medical student protest for justice in Cuddalore district govt medical college

பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மாணவிக்கு நீதி கேட்டும், நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களிடம் போதையில் தகராறு செய்பவர்களிடம் இருந்து பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு கேட்டு சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவ ,மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

கருப்பு பட்டை அணிந்து கையில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் மருத்துவக் கல்லூரிக்கு வரும் நோயாளிகளுக்கு முதுநிலை மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவம் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Cuddalore Doctors kolkata
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe