கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் நேற்று காலை 3.40 மணியளவில் தாயுடன் உறங்கிய குழந்தை காணவில்லை என்றும், அந்தக் குழந்தை அருகிலுள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததும் அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Advertisment

well

இதைத்தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காவல்துறை விசாரித்துவந்தது. குழந்தையின் தாய் உட்பட பத்து பேரை அவர்கள் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

அந்த விசாரணையின் அடிப்படையில், தற்போது அதிரடியாக அந்த வீட்டிலேயே உறங்கிக்கொண்டிருந்த உறவினர் ரகுநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அந்தக் குழந்தையை பாலியல் நோக்கத்துடன் தூக்கி சென்றிருக்கிறார். அப்போது அந்தக் குழந்தை அழுததால், குழந்தையின் வாயை மூடியுள்ளனர். வாயை மூடியதால் அந்தக் குழந்தை மயக்கநிலைக்கு சென்றது. இதைத்தொடர்ந்து அவர் அருகிலிருந்த கிணற்றில் அந்தக் குழந்தையை வீசியுள்ளார். இந்த செய்திகள் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.