Skip to main content

பாலைவனமாக மாறிவரும் கோடியக்கரை!!! பசுமை வனமாக மாற்றிட அரசு முன்வருமா? 

Published on 15/02/2019 | Edited on 15/02/2019


 

kodiyakkarai


 


உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகளின் புகலிடமாகவும், வன விலங்குகளின் சரணாலயமாகவும் உள்ள கோடியக்கரை, பசுமை மாறா காடுகளையும் கொண்டுள்ளது. அந்த அழகிய வனம் கஜாபுயலில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 10 ஆண்டுகளை தாண்டும் என்கிறார்கள் வனம் மன்றும் உயிரின ஆர்வலர்கள்.
 

நாகை மாவட்டம், வங்க கடலோரத்தின் கடைகோடி தாலுகாவான வேதாரண்யத்தில் இருந்து பத்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது கோடியக்கரை.  அந்த கிராமத்தின் கிழக்கே கடலோரமாக சுமார் 4.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது கோடியக்காடு. அந்தக் காட்டில் பல்வேறு வகையான மரங்களும், மூலிகை செடிகளும், பசுமை மாறாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தன. அங்கு வன விலங்குகள் சரணாலயமும், வனத்தின் மற்றொரு பகுதியில் பறவைகள் சரணாலயமும் பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்துவந்தது. அழகிய புள்ளி மான்களும், வெளி மான்களும், குதிரைகளும், நரிகளும், காட்டுப்பன்றி, முயல், குரங்கு என பல்வேறு வகையான  உயிரினங்களும் பார்வையாளர்களை நெகிழ வைத்துக் கொண்டிருந்தது.


 

kodiyakkarai


 

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 15 ம்தேதி யாரும் எதிர்பார்த்திடாத வகையில் வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் கணக்கிலடங்காத மான்களும், வனவிலங்குகளும் செத்து மிதந்தன. காற்றின் தாக்கத்தை தாங்கமுடியாமல் காட்டைவிட்டு சிதறி தப்பி ஓடிய மான்கள், குதிரைகள் கடல் சேற்றில் சிக்கி இறந்தன. ஆனால் வனத்துறை அதிகாரிகளோ 10 மான்களுக்கு மேல் இறக்கவில்லை என மூடிமறைத்தனர்.
 

கோடியக்காட்டிற்குள் நுழையும் வழியில் மூலிகைகளுக்கான வனமும் இருந்தது.  அங்கு காய்ச்சல், சளி, ஆஸ்துமா, புற்றுநோய், வாதம், கபம், என பல்வேறு வகையான நோய்களைத் தீர்க்கக்கூடிய மூலிகைகளும் காணப்பட்டது. இதை தினசரி நாட்டு வைத்தியர்களும், பொதுமக்களும் பயன்படுத்திவந்தனர். அந்த பகுதியும் காற்றின் தாக்கத்தில் இருந்து தப்பிடவில்லை. மூலிகை மரங்களும், செடிகளும், முறிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
 

காட்டுப் பகுதியிலும் அதனை ஒட்டிய சதுப்பு நிலப்பகுதியிலும் உப்புத்தண்ணீர் நிறைந்த பகுதிகளில் பறவைகள் சரணாலயம் இருக்கிறது. ஆண்டுதோறும் சீசன் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை,  ஈரான், ஈராக், ரஷ்யா, சீனா, இலங்கை, பங்களாதேஷ்,  உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள குளிர்பிரதேசங்களில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் கோடியக்காட்டிற்கு வந்து பார்ப்பவர்களை மனம் குளிர வைத்துக் கொண்டிருந்தது. இந்த ஆண்டும் வழக்கம்போல் பறவைகளின் வருகையும் இருந்தது. ஆனால் அவற்றுக்கான காலசூழலும், காடுகளும், இல்லாமல் போனதால் ஏமாற்றத்துடன் உடனே திரும்பி சென்று விட்டன.
 

"புயல் கரையை கடந்து மூன்று மாதங்களை கடந்துவிட்டது. வனத்தையோ, வனவிலங்குகளையோ காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கமோ, வனத்துறை அதிகாரிகளோ முனைப்புக்காட்டவில்லை. எங்க ஊருக்கு புகழே காடுதான்.  அந்த காடுகள் முற்றிலுமாக முறிந்து சிதைந்து சின்னாபின்னமாகி பாலைவனமாக மாறிக்கிடக்கிறது. முறிந்த மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்தி, வனத்திற்கு தேவையான மரக்கன்றுகளையும், மூலிகை வனத்திற்கு தேவையான மூலிகை செடிகளையும் உருவாக்கிட வேண்டும். காட்டில் எஞ்சியிருக்கும் விலங்களுக்கு பிப்ரவரி மாதம் துவக்கத்திலேயே தண்ணீர் இல்லாத நிலையிருக்கிறது. வரும் மார்ச், ஏப்ரல், மே மாதம் கடும்கோடை நிலவும். அப்போது எஞ்சியிருக்கும் விலங்கள் தண்ணீருக்கு தவித்து இறந்துபோகும் நிலையே உருவாகும். அதனை தடுத்திடும் வகையில் எந்த முயற்சியும் அரசு எடுக்கவில்லை. உடனே அரசு வனத்தைக் காப்பாற்றி, சுற்றுலா இடமாக மாற்றிட முன்வரவேண்டும்." என்கிறார்கள் சமுக ஆர்வளர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுழன்றடித்து கிளம்பிய காற்று; தலைதெறிக்க ஓடிய மீனவர்கள்!

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

Whirling wind; Fishermen who ran for their lives!

 

கோடிக்கரையில் இன்று காலையில் கடலின் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டு சுழல்காற்றாக வீசியதால் மீனவர்கள் பதறி அடித்துக்கொண்டு ஓட்டம்பிடித்தனர்.

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடிக்கரை கடலில் தீடீரென நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதால் பலத்த சுழல்காற்று வீசியது. இந்த சுழல்காற்று கடலில் இருந்து பூதம்போல கிளம்பி தரையை நோக்கி சுழண்டடித்தபடியே வந்தது. அப்பொழுது கடற்கரையில் அடுக்கிவைத்திருந்த வலைகட்டு, பெட்கள் என அங்கிருந்த பொருட்களை தூக்கிவீசியது.

 

Whirling wind; Fishermen who ran for their lives!

 

மேலும் அங்கிருந்த மீனவர்கள் தங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த கீற்றுகொட்டைகளும் பறந்தன. இதைபார்த்த கடலோரம் இருந்த மீனவர்கள் அச்சமடைந்து கூச்சல் போட்டுக்கொண்டு தலைதெறித்து ஓடினர். சுமார் 10 நிமிடம் வீசிய இந்த சூழல் காற்றால் கடற்கரையே மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. அந்த சமயத்தில் கடற்கரை பகுதியில் இருந்த மீனவர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

கோடியக்கரையில் முகாமிட்டுள்ள கடற்படை கப்பல்! அச்சத்தில் மக்கள்! 

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

Naval ship encamped at Kodiakkara! People in fear!

 

வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரை கடற்கரையில் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ரோவர்கிராப்ட் ரோந்து கப்பல் நின்றதால் கடலோர பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோவர் கிராப்ட் கப்பல் வந்துள்ளது. கடலிலும் நிலத்திலும் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பல் ராமேஸ்வரத்திலிருந்து கோடியக்கரை வரை வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் திடீரென்று கோடியக்கரையின் கரையோரத்தில் ரோவார் கிராப்ட் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதே பரபரப்புக்கு காரணம்.

 

இலங்கையிலிருந்து வேதாரண்யம் வழியாக தங்கம் கடத்தும் நபர்களை பிடிக்க இந்த கப்பல் வரவழைக்கப்பட்டுள்ளதா அல்லது எல்லை தாண்டி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் கடல் வழியாக ஊடுருவும் தீவிரவாதிகளை கண்காணிக்க இந்த கப்பல் வர வழைக்க வைக்கப்பட்டுள்ளதா அல்லது இலங்கையில் தற்பொழுது நிதி நிலைமை மோசமாகி கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் இருந்து அகதிகளாக மக்கள் எவரேனும் வேதாரண்யம் கடல் பகுதியில் அத்துமீறி நுழைவதை கண்காணிக்கவும் அதற்கான பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த கப்பல் வந்துள்ளதா என மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இது குறித்து கடலோர காவல் படை அதிகாரிகளிடம் கேட்டபொழுது, "வழக்கமான ரோந்து பணிக்காக மட்டுமே இந்த கப்பல் வந்துள்ளது" என தெரிவித்தனர். மேலும் ரோவர் கிராப்ட் கப்பலிருந்து பணிக்கு வந்த வீரர்களும் கடலோர காவல் படை வீரர்களும் ஆலோசனை நடத்திவருகின்றனர். திடீரென்று ரோவர் கிராப்ட் கோடியக்கரையில் முகாமிட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.