கொடநாடு விவகாரத்தில் தெகல்ஹா முன்னாள் ஆசியரியர் மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக மேத்யூ சாமுவேல் ஆணவப்படம் வெளியிட்டார். இதையடுத்து அதிமுகவின் ஐடி பிரிவின் நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேத்யூ சாமுவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி மேத்யூ சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இம் மனுவை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்றம். இதையடுத்து மேத்யூ சாமுவேல் மீதான வழக்கின் விசாரணைக்கு 4 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.