Skip to main content

"திரில்லர் படங்களுக்கு இணையானது கோடநாடு சம்பவம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

"Kodanadu incident is parallel to thriller films" - Chief Minister MK Stalin's speech!

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நெல்லை மாவட்ட மக்களிடையே தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (17/02/2022) மாலை 05.00 மணிக்கு காணொளி மூலம் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். 

 

அப்போது அவர் கூறியதாவது, "நெல்லை மாவட்டத் தியாகிகள் பெயரைக் கேட்டாலே புத்துணர்ச்சித் தருகிறது. குடியரசுத் தின அணி வகுப்பில் தமிழக ஊர்தியை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. பிரதமரிடம் கோரிக்கை விடுத்தும் தமிழக அலங்கார ஊர்தி அணி வகுப்பில் இடம் பெறவில்லை. வ.உ.சி. யார்?, வேலுநாச்சியார் யார்? என தமிழக சுதந்திர போராட்ட வீரர்களை மத்திய அரசு யார் எனக் கேட்டது. சீப்பை ஒளித்து வைத்தால், திருமணம் நின்றுவிடும் என்ற ரீதியில் அணி வகுப்பு ஊர்தியைப் புறக்கணித்தனர். தமிழகம் முழுவதும் அணி வகுப்பு ஊர்திக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். 

 

அ.தி.மு.க. 10 ஆண்டுகளில் செய்ய முடியாததை தி.மு.க. 9 மாத கால ஆட்சியில் செய்துள்ளது. நெல்லையில் இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைத்தவர் கலைஞர். திராவிட இயக்க வரலாற்றிலும் பொன் எழுத்தால் பொறிக்கப்பட்ட ஊர் நெல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைதான் தலைப்புச் செய்தியாக இருந்தது.   அ.தி.மு.க. ஆட்சியில் தான் தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடைபெற்றது. எந்த தகுதியோடு தி.மு.க. ஆட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார்? பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிவிட்டது யார்? ஹாலிவுட் திரில்லர் படங்களுக்கு இணையானது கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம். கனகராஜ் மரணம், சயான் குடும்பம் மரணம் என ஐந்து பேர் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

"Kodanadu incident is parallel to thriller films" - Chief Minister MK Stalin's speech!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆணையம் மீண்டும் தொடங்கியுள்ளது. ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதே தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதிதானே. தி.மு.க. ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா என மக்களிடம் நேரடியாக எடப்பாடி பழனிசாமி கேட்டறியலாம். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருட்டாக உள்ளது என சொல்வதற்கு ஒப்பானது எடப்பாடி பழனிசாமி பேச்சு. 

 

நகரப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கின்றனர். நாட்டுக்கே முன்னோடியாக தி.மு.க. அரசுதான் பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது. அறிவிக்கப்பட்டத் திட்டங்களை நாள்தோறும் ஆய்வு செய்கிறேன். கரோனா வார்டுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். சாலை அமைக்கும் பணிகளை நள்ளிரவிலும் ஆய்வு செய்தேன். அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு பொறியியல் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து இல்லங்களுக்கும் தி.மு.க.வின் திட்டங்கள் செல்கின்றன. தி.மு.க. சொல்கிற திட்டங்களை கட்டாயம் நிறைவேற்றும். தி.மு.க.வின் சாதனைகள் இந்தியாவுக்கே வழிகாட்டியாக உள்ளது" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.