Advertisment

"கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது" - அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் பேட்டி!

publive-image

Advertisment

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று (23/12/2021) விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், இரண்டாவது நபரான வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜராகினர். மற்ற 8 பேர் கேரளாவில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தனிப்படை காவல்துறையினர் 150 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால் மேலும் காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் நீதிபதி சஞ்சய் பாபாவிடம் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும்வாளையாறு மனோஜ், தனது நிபந்தனை பிணையில் தளர்வுகளை அளிக்கக் கோரிமனுத்தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், நிபந்தனைகளைத் தளர்த்தக் கூடாதென்றும் வாதிட்டனர். அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனோஜிற்கு நிபந்தனை ஜாமினில் தளர்வு கோரிய மனு மீது பின்னர்தீர்ப்பளிப்பதாக தெரிவித்தார். மேலும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையைவரும் ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கொடநாடு, கொலை, கொள்ளை வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 150 சாட்சிகளிடம் விசாரணை நிறைவு; தேவைப்பட்டால் பல கைது நடவடிக்கை இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

incident kodanadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe