Advertisment

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு: சயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

Kodanadu estate murder case; Court grants conditional bail to Cyan

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017இல் காவலாளியைக் கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயன், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர்.

Advertisment

இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு,சிறையில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கும் மேல் சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்கக் கோரி சயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சுந்தர் மோகன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் எட்டு பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாலும், கீழமை நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை ஏற்கனவே துவங்கிவிட்டதாலும்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார்.

Advertisment

இதையடுத்த இந்தமனுவை விசாரித்த நீதிபதி ஆர். சுப்ரமணியம், வழக்கு முடியும்வரை நீலகிரியில் தங்கியிருக்க வேண்டும் என்றும், வாரம் ஒருமுறை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சயனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Kodanad Estate Conditional bail highcourt Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe