Advertisment

கோடநாடு விவகாரம்... திமுக போராட்டம்... கைது....

dd

Advertisment

கோடநாடு வீடியோ விவகராத்தில் முதல்வர் மீது தமிழக ஆளுநர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் திமுக ஆர்பாட்டம் நடத்தியது. இதற்கு முன்னதாக கோடநாடு வீடியோ விவகராத்தில் திமுக சார்பில் ஆளுநரிடம் சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று ஒரு மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.

dd

ஆனால் இதுவரை அந்த மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்குமுன் இந்த போராட்டத்தை அறிவித்திருந்தார். மேலும் இந்த போராட்டம் பனகல் மாளிகை முன்பு நடைபெறும் என்றும், இந்த போராட்டம் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், சேகர்பாபு ஆகிய நால்வரின் தலைமையில் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இன்று காலை போராட்டம் நடைபெற்றுது.

Advertisment

dd

இதனால் சற்று நேரம் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதன் பின் போராட்டம் நடத்திய திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு முன் போராட்டம் நடத்த சென்ற திமுகவினரை காவல்துறையினர் தடுப்புகளை கொண்டு பாதியிலே நிறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kodanad Estate
இதையும் படியுங்கள்
Subscribe