Published on 23/08/2021 | Edited on 23/08/2021

தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரும் பொருட்டு சபாநாயகரிடம் அக்கட்சியைச் சேர்ந்த செல்வபெருந்தகை மனு அளித்துள்ளார். சபாநாயகர் அனுமதி அளிக்கும் பட்சத்தில் இன்று (23.08.2021) இதுதொடர்பாக விவாதம் நடைபெறும். இந்நிலையில், பேரவையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதனால் அதிமுக உறுப்பினர்கள் பேரவை நிழச்சியில் கலந்துகொள்வார்களா அல்லது இன்றும் பேரவை நிகழ்ச்சியைப் புறக்கணிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.