Advertisment

கொடநாடு கொலை; கனகராஜ் மர்ம மரணம் - சகோதரர் உள்ளிட்ட இருவர் கைது!

பரக

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள போலீஸார், இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். ஆனால், இது எதேச்சையான விபத்து இல்லை என்றும், திட்டமிட்ட படுகொலை என்றும் கனகராஜின் மனைவியும், அவரது உறவினர்களும் தெரிவித்து வந்தனர். ஆனால் இது சாலை விபத்துதான் என நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Advertisment

தற்போது கொடநாடு வழக்கு மீண்டும் வேகமெடுத்திருக்கும் நிலையில், கனகராஜின் மரணம் குறித்தும் விசாரணை நடத்த சேலம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சேலம் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கனகராஜின் மரணம் குறித்த விசாரணை மீண்டும் கையிலெடுக்கப்படுவதற்கு கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் சாமி கொடுத்த சில தகவல்களே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாட்சியங்களை கலைக்க முயற்சித்தாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

kodanadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe