ADVERTISEMENT

கோடநாடு வழக்கு: சாட்சி விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு நிராகரிப்பு!

07:23 PM Mar 19, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது. கடந்த 2017- ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக, மனோஜ், சயான், தீபு உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தங்களைத் தவிர மேலும் சிலரை விசாரிக்க வேண்டும். சசிகலா மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை இவ்வழக்கில் சேர்க்க வேண்டும் என்று தீபு, சயான் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கில் கூடுதல் மனுவாக, ஏற்கனவே சாட்சி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மேல் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சாட்சி விசாரணையைத் தொடங்கினால், வழக்கு போக்கு மாறிவிடும்" என்றார்.

இதையேற்றுக் கொண்ட நீதிபதி, சாட்சி விசாரணைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்ற தீபுவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி அவகாசம் கேட்டதையடுத்து, வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT