நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளைவழக்கில் விசாரணையானது மிகத்தீவிரமாக நடைபெற்று வருகிறது.கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டநிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால்இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கடந்த சிலநாட்களாகவேஅரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்காவது நபரான ஜம்சிர்அலியிடம் 8 மணி நேரமாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதகை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் ஆஜராகிய அலியிடம் தனிப்படை விசாரணை நடத்தியது. கொடநாடு எஸ்டேட் பங்களாவில் ஜன்னல்களை உடைத்து நுழைந்த 4 நபர்களில் ஒருவர் ஜம்சிர்அலி என்பது குறிப்பிடத்தக்கது.