Advertisment

மதியத்திற்கு தள்ளி வைக்கப்பட்ட கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு

kodanadu

Advertisment

ஜெயலலிதா இறந்ததற்கு பின்னால் அவருக்கு பிடித்தமான கொடநாடு பங்களாவில் கொள்ளை அடிக்க முயன்றது 11 பேர் கொண்ட கும்பல்.அந்த கொள்ளை முயற்சியை தடுக்க முயன்ற பங்களா காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டான்.இன்னோரு காவலாளி கிருஷ்ண பகதூர் பயங்கரமாய் தாக்கப் பட்டான்.

இந்த நிலையில் கொலையாளிகள் யார்? என போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும்போது தான் சயான், மனோஜ் என்கிற இரண்டு பேர் முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டார்கள். அந்த சயானும், மனோஜூம் தான் எங்களை கொள்ளை அடிக்கச் சொன்னதே எடப்பாடி பழனிச்சாமி தான் என சொல்லியபோது அதிர்ந்து விட்டது தமிழகம்.

முக்கிய குற்றவாளிகளான சயான், மனோஜ் ஆகியோர் கடந்த 21ந் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது சயான், பணம் பத்தும் செய்யும் பதவி பதினொண்ணும் செய்யும் எனச் சொல்ல, மனோஜோ இந்த கொலைக்கு முக்கியக் காரணம் சஜீவன் தான் அவனைப் பற்றி அடுத்த வாய்தாவுக்கு வரும் போது சொல்கிறேன் என சொல்லிப் போனான்.

Advertisment

நக்கீரன் அப்போதிருந்தே இந்த கொடநாடு கொலை வழக்கில் சூத்ரதாரியாக செயல் பட்டவன் சஜீவன் தான் என சொல்ல, அதை நிரூபிக்கும் விதமாகமனோஜூம் சஜீவன் தான் இந்த கொலையில் முக்கியமானவன் எனச் சொல்ல நக்கீரன் கூற்று உண்மையாகிப் போனது.

இந்த நிலையில்சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 10 பேரும் இன்று ஆஜராக வேண்டும் என்று ஊட்டி நீதி மன்றம் உத்தரவு இட்ட நிலையில்இன்று 11 மணிக்கு ஆஜர் படுத்த முடியவில்லை போலீசாரால்.உடனே மதியம் 3 மணிக்குள் எல்லோரையும் ஆஜர் படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவு இட்டிருக்கிறார்.3 மணியை நோக்கி இருக்கிறது கொடநாடு கொலை - கொள்ளை வழக்கு.

kodanadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe