Kodanadu case ... Investigation on 5 persons including J's former car driver in a secret place!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ள போலீசார், இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கார் மோதி உயிரிழந்தார்.

Advertisment

 Kodanadu case ... Investigation on 5 persons including J's former car driver in a secret place!

இது சாலை விபத்து தான் என நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணையை மீண்டும் கையிலெடுத்தது காவல்துறை. கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாட்சியங்களைக் கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் உள்ளிட்ட இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்து கூடலூர் சிறையிலடைத்தனர். இந்த வழக்கில் கனகராஜின் சகோதரரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தனிப்படை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து மேலும் 5 நாட்கள் கனகராஜின் சகோதரர் தனபாலைக் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Advertisment

 Kodanadu case ... Investigation on 5 persons including J's former car driver in a secret place!

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷுக்கும் விதிக்கப்பட்டிருந்த 5 நாள் போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் இன்று ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்பொழுது போலீசார் தரப்பில் மேலும் 7 நாட்கள் ரமேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஸ்ரீதரன் கூடுதலாக 5 நாட்கள் ரமேஷை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்தார்.

இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் அய்யப்பன் உள்பட 5 பேரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.