Advertisment

கோடநாடு வழக்கு... கனகராஜ் சகோதரருக்கு காவல் நீட்டிப்பு!

Kodanadu case: Extension of custody for Kanagaraj brother!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை மீண்டும் கையிலெடுத்துள்ளபோலீசார், இது தொடர்பான சாட்சியங்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திவருகிறது. கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் கனகராஜ், அந்த சம்பவம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோதுகார்மோதி உயிரிழந்தார்.

Advertisment

ஆனால் இது சாலை விபத்து தான் என நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான விசாரணையை மீண்டும் கையிலெடுத்தது காவல்துறை. கனகராஜ் உயிரிழப்பு தொடர்பாக அவரது உறவினர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சாட்சியங்களைக் கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் உள்ளிட்ட இருவரைத் தனிப்படைபோலீசார்கைது செய்தனர். இந்த வழக்கில் கனகராஜின் சகோதரரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தனிப்படை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது. இந்நிலையில் மேலும் 5 நாட்கள்கனகராஜின் சகோதரர்தனபாலைக்காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

Kodanad Estate nilgiris police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe