kodanadu case businessman police investigation

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் தனிப்படை காவல்துறையினர் நடத்திய விசாரணை நிறைவுப் பெற்றது.

Advertisment

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்து தனிப்படைகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, 200- க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், கோடநாடு பங்களாவில் இருந்து திருடப்பட்ட ஆவணங்கள், சிஐடி நகரில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணங்களில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

சிஐடி நகரில் ஐந்து தொழிலதிபர்கள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் லாஜு வோராவிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று முடிந்தது.