Published on 14/01/2019 | Edited on 14/01/2019

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கோடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டிராஃபிக் ராமசாமி சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கோடநாடு வீடியோ விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதால் தமிழக காவல்துறை இந்த வழக்கை விசாரித்தால் அதில் நியாயம் கிடைக்காது என்றும் அதனால் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.