சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்ததிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா பேசுகையில்,
கொடநாடு கொலை சம்பவம் நடந்தபொழுது கொடநாட்டில் என்னென்னவெல்லாம் நடந்தது. எதைஎதையெல்லாம் மறைத்தார்கள் என்பதுஇந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டும். உண்மை குற்றவளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்படி நேர்மையாக விசாரித்தால் தமிழக முதல்வர் எடப்பாடிதான் முதல் குற்றவாளி என குற்றப்பத்திரிகையில் சேர்ப்பதற்கு எல்லா பூர்வாங்க ஆதரங்களும் ஒருவரால் உறுதிசெய்யமுடியும்.

நடந்த சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
5.12 .2016 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார்.14.2.2017 சசிகலா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை அறிவிக்கப்படுகிறது. 16.2,2017 எடப்பாடி சசிகலா காலில் தவழ்ந்து தவழ்ந்து வணங்கி எடப்பாடி முதல்வர் பதவி ஏற்கிறார்.24.4 .2017 கொடநாட்டிலுள்ள காவலாளி ஓம்பகதூர் மர்மமான முறையில்கொலை செய்யப்படுகிறார். அதன்பிறகு 28.4.2017 இரவு 8.15க்கு அங்கேட்ரைவராக வேலைபார்த்த கனகராஜ் ஒரு விபத்தில் மரணமாகிறார். அடுத்த 24 மணிநேரத்திற்கு முன்பாக 29.4.2017 மாலை ஐந்து மணிக்கு கேரளாவில் சயன் என்பவர் விபத்தில் தன் குடும்பத்தை இழந்து அவர் மட்டும் தப்பிக்கிறார்.4.7.2107 தினேஷ்குமார்கொடநாட்டில் உள்ள சிசிடிவிக்கு இன்ச்சாரச். அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது.
இப்போது ஜனவரி 2019. இன்று சயன் என்ன சொல்கிறார் என்றால், எடப்பாடி பழனிசாமிதான் அங்கேஇருக்கிற ஆவணங்கள், கணினி மென்பொருட்கள்,விபரங்கள், பென்ட்ரைவ் போன்றவற்றை எடுக்க சொல்லியிருக்கிறார் என்று கனகராஜ் தன்னிடம்சொன்னதாகவும்,கனகராஜும் நானும் செய்தோம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இந்த சம்பவத்தின்போது அங்கு ஒரு போலீசார் கூட இல்லாததன் காரணம் என்ன? நான் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த பொழுதுதான் உதகையில் அனுமதி பெற்று கொடநாடு எஸ்டேட்டிற்கு என்று தனி மின் லைன் கொடுக்கப்பட்டது. சிறப்பு அனுமதியுடன் 24 மணிநேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது.அப்படிப்பட்ட நிலையில் சம்பவம் நடந்தநேரத்தில் கரண்ட் போனதற்கு யார் காரணம். அங்குள்ள 24 சிசிடிவி கேமராவில் ஒரு கேமரா கூட அந்த குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்யாமல் போனது ஏன்?. என பல கேள்விகள் உள்ள நிலையில். அதே சயனும், வலையார் மனோஜ் அவர்களும் திட்டவட்டமாக இதற்கு பின்னால் எடப்பாடிதான் உள்ளார் என கூறியதன் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையிலும்,120 பி கூட்டுச்சதி என்று சொன்னால், முதல் குற்றவாளி முதல்வர் எடப்பாடிதான் என்பதுதான் எங்களின் நேரடியான குற்றச்சாட்டு. விசாரணை சயனிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
எனவே இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை வேண்டும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)