"கொடைக்கானல் ஓட்டல் கழிவுகளை ஊருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்"- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அதிரடி உத்தரவு. மேலும் கொடைக்கானலில் சீசன் நேரங்களில் "மின் சக்தியால்" இயங்கும் வாகனங்களை பயன்பாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் கொடைக்கானலில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து விதியை மீறிய கட்டடங்கள் இல்லை என்பதை ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து ஆய்வின் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றவும், நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.